தமிழக அரசியலில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மே 13-ம் தேதி ஒரு மிகமுக்கியமான நாளாக மாறியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். விதிகளின்படி திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்துள்ளதாலும், ஒருவர் சபாநாயகராக இருப்பதாலும் தவெக-வின் நேரடி வாக்கு பலம் தற்போது 106-ஆக உள்ளது.
மொத்தமுள்ள 234 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. ஆனால், தற்போதுள்ள சூழலில் காங்கிரஸ் (5), விசிக (2), கம்யூனிஸ்ட் (4) மற்றும் ஐயுஎம்எல் (2) என மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய்யால் தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஒருமித்த ஆதரவு கிடைக்காவிட்டால் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால், மே 13 அன்று நடக்கவுள்ள இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
