தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட விஜய், வழக்கமான அரசியல்வாதிகளின் உடையைத் தவிர்த்து, கோட் சூட் அணிந்து வந்தது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ-வும், முதலமைச்சர் விஜயின் நீண்டகால நண்பருமான ஸ்ரீநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

​அதற்குப் பதில் அளித்த ஸ்ரீநாத், “அது எங்கள் தலைவரின் தனிப்பட்ட ஸ்டைல். அதுதான் எங்கள் தலைவரின் ஸ்வேக் (Swag)” என்று மிகவும் கூலாகவும் கெத்தாகவும் பதில் அளித்தார். முதல்வரின் இந்த நவீனத் தோற்றம் இளைய தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், ஸ்ரீநாத்தின் இந்தப் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.