வளைகுடா நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நடக்கும் சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

​வரும் மே 1-ம் தேதி முதல், சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு வரும் 4 இலக்க ‘டெலிவரி ஆதென்டிகேஷன்’ (DAC) குறியீட்டைச் சொன்னால் மட்டுமே சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இந்த புதிய ஓடிபி முறை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது. அதே சமயம், சர்வதேச சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மே 1-ம் தேதி சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.