தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இங்கு  லட்சுமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டு தீ பரவியது.

இதனால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயிலிருந்து நாசமான நிலையில் பல அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களும்  எரிந்து நாசமானது. மேலும் வனத்துறை தீ தடுப்பு காவலர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.