மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்ய ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளார். நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 300-ஐத் தாண்டி ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியுள்ளதால், வெளிப்புறத்தில் ஓடினால் உடல்நலம் பாதிக்கப்படும் என அஞ்சிய அவர், ஒரு ஷாப்பிங் மாலுக்குள் ஜாகிங் செய்துள்ளார்.
டீ-சர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு மாலின் தாழ்வாரங்களில் அவர் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாலுக்குள் ஓடுவதால் தூசி இல்லாத சூழல், சுத்தமான காற்று மற்றும் ஏசி வசதி கிடைப்பதாக அந்த இளைஞர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள், அந்த இளைஞரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டியுள்ளனர். தற்போது மும்பையில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் கட்டிடக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடப்பதால் காற்றில் தூசியின் அளவு அதிகரித்துள்ளது.
View this post on Instagram
“>
இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர வேண்டாம் என மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், உடல் நலத்தைப் பேண அந்த இளைஞர் மேற்கொண்ட இந்த ‘மாஸ்டர் பிளான்’ பலரையும் கவர்ந்துள்ளது.
