சசிகலாவின் அஇபுதமமுக மற்றும் ராமதாஸ் தரப்பு கூட்டணி அமைத்தபோது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் காண்பார்கள் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்த மெகா கூட்டணி மற்ற பெரிய கட்சிகளுக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியல் அரசியல் விமர்சகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அஇபுதமமுக 77 இடங்களிலும், ராமதாஸ் தரப்பு 31 இடங்களிலும் என மொத்தம் சுமார் 108 தொகுதிகளில் மட்டுமே இவர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், அதைவிடக் குறைவான இடங்களில் மட்டுமே போட்டியிடுவது எப்படி பெரும்பான்மையை பெற்றுத் தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தக் கூட்டணி உண்மையில் வெற்றி பெறுவதற்காகக் களம் இறங்கியுள்ளதா அல்லது மற்ற கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
