‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தை முன்வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. “ஜனநாயகன் திரைப்படம் மட்டும் முறையாகத் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருந்தால், நானும் ஒரு சாதாரண ரசிகனாக தியேட்டருக்குப் போய் படம் பார்த்திருப்பேன்” என்று அண்ணாமலை உருக்கமாகத் தெரிவித்துள்ளார். படம் லீக்கான விவகாரத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், இதில் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தப் படம் லீக்கானதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தான் காரணம் என்று பரப்பப்படும் செய்திகளை அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். “இது வன்மத்தின் உச்சம்” என்று குறிப்பிட்ட அவர், தேவையில்லாமல் பாஜக தலைவர்களின் பெயர்களை இழுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டுமெனில் சிபிஐ விசாரணைக்கும் பாஜக ஆதரவு அளிக்கத் தயார் என அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
