சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் அதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாகவே குரங்குகள் என்றால் சேட்டைக்கு பஞ்சம் இருக்காது.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், குரங்கு ஒன்று கிளாஸில் இருக்கும் மதுபானத்தை குடிக்கிறது . அது குடிப்பதை பார்த்தால் இதில் அதிக அனுபவம் இருப்பது போல தெரிகின்றது. ஜூஸ் குடிப்பது போல அப்படியே மதுவை குடிக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.