மும்பை நகரின் பாதுகாப்பு மற்றும் அதன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராதா என்ற பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இரவு 11 மணி அளவிலும் மும்பை லோக்கல் ரயில்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும், கூட்டமாகவும் இருக்கின்றன என்பது பதிவாகியுள்ளது.
மேலும் மும்பை நகரம் ஏன் ஒருபோதும் உறங்குவதில்லை என்பதற்கும், அங்கு பெண்கள் எந்த நேரத்திலும் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்பதற்கும் இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. குறிப்பாக, அந்த நேரத்திலும் லேடீஸ் கம்பார்ட்மென்ட் முழுவதும் பெண்கள் இருப்பதும், பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகள் பணியில் இருப்பதும் நெட்டிசன்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
What makes #Mumbai so special? The no.1 thing here is the SAFETY it offers to its women.
It is 11 PM. A weekday. I am going home from one end of the city to another after meeting a relative, in a local train. The ladies compartment/ coach is almost full (you are never alone in… pic.twitter.com/UBnZgQuVpw
— Radha✨ (@SheIsTheFire) December 23, 2025
“>
இந்த வைரல் வீடியோ மும்பையின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மட்டும் காட்டாமல், அந்த நகரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஒரு பெண் தனியாக இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது ஏற்படும் பயம் மும்பையில் இல்லை என்பதை ராதா தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். “மும்பையை எது சிறப்பானதாக மாற்றுகிறது?” என்ற கேள்விக்கு “பெண்களின் பாதுகாப்பு” என்பதே தனது முதல் பதில் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 25 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த சிறிய வீடியோ, ஒரு பெருநகரம் பெண்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பான சூழலை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதால், பலரும் இதனைப் பகிர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
