சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், சிஎஸ்கே ரசிகர்கள் மும்பை அணியை கிண்டல் செய்யும் வகையில் எழுப்பிய முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் பொதுவாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்களது அணியின் கேப்டனை ‘மும்பை சா ராஜா’ என்று அழைப்பது வழக்கம். ஆனால், இப்போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்கள், மும்பை அணியின் கோட்டையிலேயே சிஎஸ்கே தான் ராஜா என்பதைக் குறிக்கும் வகையில் ‘மும்பை சா ராஜா சிஎஸ்கே’ என்று மைதானம் அதிர முழக்கமிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Mumbai Cha Raja – CSK ‘ Chants erupted at Chepauk humbling Mumbai fans 😭😭 pic.twitter.com/sc1h4nrmqf
— rocket.jadeja (@sherjedeja) May 2, 2026
“>
இதனால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே – மும்பை அணிகளுக்கு இடையிலான மோதல் என்றாலே அது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வம்புக்கு இழுக்கும் விதமாக சிஎஸ்கே ரசிகர்கள் மேற்கொண்ட இந்த செயல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஒருபுறம் சென்னை ரசிகர்கள் இதனை வெற்றிக் கொண்டாட்டமாகப் பார்த்தாலும், மறுபுறம் மும்பை ரசிகர்கள் இது தங்களை அவமதிக்கும் செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியிருப்பினும், சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்த இந்த முழக்கம் நடப்பு ஐபிஎல் தொடரின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
