ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியின் போது, மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் சென்னை ரசிகர்களுக்கும் இடையே நடந்த சுவாரசியமான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, எல்லையோர பகுதியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் “CSK, CSK” என்று விண்ணதிர முழக்கமிட்டனர். ரசிகர்களின் இந்த அதீத சத்தத்தைக் கேட்ட சூர்யகுமார், விளையாட்டாக தனது இரண்டு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டு ரியாக்ஷன் கொடுத்தார்.
SKY having a funny banter with CSK fans at Chepauk 😂 pic.twitter.com/9SjBCPoDZO
— Deepu (@deepu_drops) May 3, 2026
“>
மேலும் சூர்யகுமார் யாதவின் இந்த நகைச்சுவையான எதிர்வினை உடனடியாக கேமராவில் பதிவாகி, இணையத்தில் தீயாய் பரவியது. சேப்பாக்கம் மைதானத்தின் இரைச்சலையும், சென்னை ரசிகர்களின் ஈடு இணையற்ற ஆதரவையும் சூர்யகுமார் தனது பாணியில் அங்கீகரித்த விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் விளையாட்டில் நிலவும் கடும் போட்டிகளுக்கு மத்தியிலும், இது போன்ற ஜாலியான தருணங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. சமூக வலைதளங்களில் பலரும் “இதுதான் சேப்பாக்கத்தின் பலம்” என்றும், சூர்யகுமாரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பாராட்டியும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
