கேரளா முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் நேற்று  காலமானார். இவருக்கு 101 வயது ஆகிறது. கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் கேரளாவின் முதலமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் கேரள அரசு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. வருகிற 24-ஆம் தேதி வரை அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.