மத்திய பிரதேச மாநிலம் சடார்பூரில், 43 வயது மாயா நாம்தேவ் என்ற பெண், தனது இரு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, காதலருடன் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமாலா காவல் நிலையத்தின் பம்னோரா காவல் துணைச்சாவடி எல்லைக்குட்பட்ட ராம்தோரியா பகுதியைச் சேர்ந்தது. வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயாவின் கணவர் முன்னா நாம்தேவ், குஜராத்தில் உள்ள மோர்பி நகரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். குடும்பத்தையும், வயதான பெற்றோர்களையும் கவனித்துக் கொள்வதற்காக வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். மனைவி வீட்டில் இரு குழந்தைகள் – ஒரு மகன், ஒரு மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு, மாயா காணாமல் போனதும், முன்னா ஊருக்கு திரும்பி காவல்துறையில் புகார் அளித்தார்.
தனது மனைவி, மற்றொரு ஆணுடன் பழகி வந்ததாகவும், மொபைல் ஃபோனில் நீண்ட நேரம் பேசுவதாக தனது மகன் தெரிவித்ததும், மாயாவிடம் அது குறித்துப் கேட்டபோது, பின்னர் காணாமல் போனதாக முன்னா புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட முன்னாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது, மாயா மீது வழக்கு பதிவு செய்து, பம்னோரா காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கணவன் முன்னா, தனது மனைவியை மீட்டு கொண்டு வரவும், திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளார்.
