அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனின் தந்தை சின்னக்குட்டி இன்று காலமானார். 105 வயதான அவர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அதிமுகவை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். EPS தனது இரங்கல் குறிப்பில், ‘தந்தை இழப்பை சந்திக்கக்கூடியது மிகப்பெரிய கஷ்டமாகும். பொன்னையன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என குறிப்பிட்டுள்ளார்.