அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தனது ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்குக் கோரி அவர் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 31 வாரங்களாக  மேலாக அவர் ஆஜராகி உள்ளதைக் கருத்தில் கொண்டது.

இறுதியில், தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவருக்கு நோட்டீஸ் அளித்து ஆஜராக உத்தரவிடலாம் என்ற நிபந்தனையை விதித்து, வாராந்திர இருமுறை ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சாதகமான உத்தரவாகப் பார்க்கப்படுகிறது.