அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, அக்கட்சியின் தொண்டர் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு இருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நீக்கியிருந்தது. இதன் காரணமாக, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் நியமனத்தை எதிர்த்துச் சூரியமூர்த்தி தரப்பினர் தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், இந்த மேல்முறையீடானது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மீண்டும் ஒரு சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
