தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.