உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவை நடந்த ஒரு சம்பவம், அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதீப் (பெயர் மாற்றம்) மற்றும் சிவானி (பெயர் மாற்றம்) ஆகிய இருவரும் ஒரே கோச்சிங் சென்டரில் பயின்றபோது அறிமுகமானவர்கள். பின்னர் அந்த நட்பு காதலாக மலர, இருவரின் குடும்பங்களும் அதை ஏற்று, சமீபத்தில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு முதல் இரவு கடந்து அதிகாலை மணமக்களின் அறைக்கு குடும்பத்தினர் சென்றபோது அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகன் பிரதீப் இறந்த நிலையில் கிடந்தார். மணமகள் சிவானி முழுமையாக அதிர்ச்சிக்குள்ளாகி அழுகையோடு “என் தவறு என்ன?” என குமுறி கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவம் அந்த வீட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

மரணத்திற்கான காரணம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. மருத்துவமனையில் பிரதீபின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இயற்கை மரணமா அல்லது ஏதேனும் உடல் நலக் குறைபாடு காரணமா என்பதை மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர். புதுமண தம்பதியில் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதிக்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.