தமிழகத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் (செல்போன்) பயன்படுத்துவதால் அடுத்தடுத்து  விபத்துகளும், கொடூர உயிர் இழப்புகளும் ஏற்படுவது ஆய்வில் அம்பலமாகியுள்ள நிலையில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான மெகா தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கோட்டை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

“இனிமேல் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தங்களது பணி நேரத்தின் போது கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமின்றி, அதனைத் தங்களது சட்டைப் பையிலேயே வைத்திருக்கக் கூடாது” என்று தமிழக அரசு மிகவும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் ஓட்டுநர்கள் சட்டைப் பையில் போனை வைத்துக்கொண்டு ரகசியமாகப் பயன்படுத்துவதாகப் பயணிகளிடமிருந்து தொடர்ந்து ‘பகீர்’ புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த அதிரடி ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது; இனிமேல் பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தும்போது ஓட்டுநர்களிடம் மொபைல் போன் இருப்பது பிடிபட்டால், சஸ்பெண்ட் உள்ளிட்ட மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனத் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.