கோட்டை வட்டாரத்தில் தற்பொழுது டாப் கியரில் ஓடிக்கொண்டிருக்கும் தவெக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘டைம் மேனேஜ்மென்ட்’ விஷயத்தில் அதிரடி காட்டி வருவது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமும் காலையில் 10 மணி ஆவதற்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் சுறுசுறுப்பாகத் தலைமைச் செயலகத்திற்கு (St. George Fort) வந்து பணிகளைத் தொடங்குவதால், அவரைப் பார்த்து மற்ற உயர் அதிகாரிகளும் அலறி அடித்துக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் சுமார் 5,500 ஊழியர்களும் இனி எவ்வித சாக்குபோக்கும் சொல்லாமல் காலை 10 மணிக்குள் கச்சிதமாகப் பணிக்கு வந்துவிட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பறந்துள்ளது; “தலைவரே சீக்கிரமா வந்துடுறாரு, நாம லேட்டா போனா எப்படி?” என்று ஊழியர்கள் மத்தியில் ஒருபுறம் ‘பகீர்’ கிளம்பியுள்ள அதேவேளையில், இந்த ‘பங்ச்சுவாலிட்டி’ (Punctuality) அதிரடி பொதுமக்களிடையே  பாராட்டைப் பெற்று சோசியல் மீடியாவில் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.