முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இன்று அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சரை பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.
அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. முதலமைச்சருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்தார்கள். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என துரைமுருகன் கூறியுள்ளார்.
