பாமக நிறுவன ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நீண்ட நாட்களாக கட்சியில் இருவரும் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது.
கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். பாமகவில் கௌரவ தலைவராக ஜிகே மணி, செயல் தலைவராக அன்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பொறுப்புகளுக்கு யாராவது நான்தான் என பவனி வந்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். சிறப்பு பொதுக் குழுவின்படி பாமகவின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக் கொண்டால் அவர் மீது நடவடிக்கை பாயும் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
