மதிமுகவில் புயலுக்குப் புயல் மோதல் நிலவி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான வைகோவும், அவரது மகனும், கட்சி கட்டமைப்பை சொந்த ஆதிக்கத்திற்கு பயன்படுத்துவதாக, முன்னாள் மதிமுக நிர்வாகி நாஞ்சில் சம்பத் கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். வைகோவின் நெருங்கிய நண்பராக இருந்த மல்லை சத்யாவை வெளியேற்றுவதற்கான முயற்சி, கட்சியில் உள்ள குழப்பங்களை வெளிப்படையாகவே காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மல்லை சத்யா மீது வைகோ குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நிலையில், சத்யாவும் அதற்குத் தாக்குப்பிடித்து, “வைகோ தந்தையை போல கட்சி தொடங்கி, இப்போது மகனுக்காக துரோகி பட்டம் கொடுக்கிறார்” என வாகை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதிமுகவில் உள்ள குழப்பம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. மல்லை சத்யா திமுகவிற்கு செல்லக்கூடும் என்ற தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் கூறுகையில், “வைகோ, துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் ஆசை ஏற்பட்டுவிட்டது. அந்த ஆசையால் தான் தந்தையும் மகனும் களத்தில் இறங்கிவிட்டனர். கடந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களை ஒதுக்கி, மகனுக்கு மட்டும் திருச்சி தொகுதியை ஒதுக்கினார். இதுவே மதிமுகவை தேய்த்துவிட்டது. தற்போது கட்சியினரிடம் இருந்து எனக்கு கிடைக்கும் தகவல்களே இது உறுதியளிக்கின்றன” என விமர்சித்தார்.
மேலும், “மதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய 12 தொகுதி, மத்திய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பேசி முடித்துவிட்டதாகவும், இது கட்சி விற்பனையாகிவிட்டதை காட்டுகிறது. துரை வைகோ ஹிட்லருடன் ஒப்பிடப்பட்டு, அவர் கட்சிக்கொடியையே சட்டையில் கட்டிக்கொள்கிறார். இது வேதனைக்குரிய தருணம்” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
முடிவில், 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரை வைகோவுக்கு வந்து விட்டது.“மதிமுகவில் தற்போது இருக்கும் உறுப்பினர்களை இரண்டு மினி பஸ்களில் ஏற்றி விடலாம். வைகோவின் தவறான நடவடிக்கைகளால் கட்சியை மீட்கவே முடியாது. பூமிநாதன் எம்எல்ஏ விரைவில் திமுகவிற்கு செல்லப் போகிறார். வைகோ, மதிமுகவுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் திமுகவிற்கே சென்று விடுவார்கள்” என்றார். இந்த கருத்துகள் மதிமுக அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
