சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை  அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் 74040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 10096 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80768 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இதே போன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 128 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 128000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.