பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ளவிருந்த 40 வயது நபர் ஒருவர், அங்கே தான் மட்டுமே அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் லூதியானாவிலிருந்து சுமார் 285 கி.மீ தூரம் பயணம் செய்து உத்தரகாண்ட் மாநிலம் தேராடூனுக்குச் சென்றார். அங்குள்ள கார்கி பகுதியில் புகழ்பெற்ற ‘கப்ரு சேலூன்’ சென்று, ஸ்டைலிஸ்டிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். 20 வயது இளைஞனைப் போல தன்னை மாற்றித் தருமாறு நகைச்சுவையாக அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, சலூன் ஸ்டைலிஸ்டுகள் அந்த நபருக்குப் பக்காவான மேக்ஓவர் வேலையைத் தொடங்கினர். முதலில் அவரது தலைமுடிக்கு ஸ்டைல் கொடுத்து, அதற்குப் புதிய ஹேர் கலர் செய்து இளம் தோற்றத்தைக் கொண்டுவந்தனர். வெள்ளையாக மாறியிருந்த தாடிக்குத் தகுந்த நிறம் கொடுத்து, முகத்திற்குப் பொலிவு சேர்க்கும் மசாஜ் மற்றும் இதர சிகிச்சைகளும் செய்யப்பட்டன.
View this post on Instagram
அனைத்து வேலைகளும் முடிந்தபின், அந்த நபரை கண்ணாடியின் முன்பு நிறுத்தியபோது அங்கிருந்தவர்களே ஆச்சரியத்தில் உறைந்துபோயினர். மேக்கஓவருக்கு முன்பு எப்படி இருந்தாரோ, அதே நர்தான் இதுவென்று நம்ப முடியாத அளவுக்கு அவரது தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. தனது புதிய லுக்கைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த நபரின் வீடியோவை சேலூன் நிர்வாகத்தினர் படம்பிடித்து, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கமான ‘the_styling_gabru’-ல் பதிவேற்றினர். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை இதுவரை 24 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
