தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பிற்கு E-KYC (Identity Verification) பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.

​மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, போலி இணைப்புகளைக் கண்டறியவும், மானியத் தொகையை உரிய பயனாளிகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கவும் LPG வாடிக்கையாளர்களுக்கு E-KYC பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்தில் இன்னும் 50 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த E-KYC பதிவை முடிக்காமல் உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​இன்றைக்குள் E-KYC பதிவை முடிக்காத வாடிக்கையாளர்கள், நாளை முதல் ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ தங்களது சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

​இந்த திடீர் சிக்கலையும் ஏஜென்சிகளில் வரிசையில் நிற்பதையும் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்களின் சமையல் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் (Indane / Bharatgas / HP Gas Apps) மற்றும் Aadhaar FaceRD செயலி மூலமாக வீட்டிலிருந்தபடியே உடனடியாக E-KYC பதிவை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.