அரசியல் களம் எப்போதுமே சுவாரஸ்யங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாதது. அந்த வகையில், தேர்தல் களம் கண்ட தள்ளாட்டத்திற்குப் பிறகு, கட்சியை அடிமட்டம் முதல் உச்சி வரை புதுப்பிக்கத் அதிரடியாக களமிறங்கியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய தி.மு.க. செயற்குழு கூட்டம், கட்சியின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் சில அதிரடி மற்றும் எதிர்பாராத முடிவுகளை எடுத்துள்ளது.

கட்சியில் கிளைச் செயலாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் வரை எத்தகைய பதவிகளில் இருப்போருக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தான் தற்போதைய ஹாட் டாபிக். குறிப்பாக, கட்சிக்காக பல தசாப்தங்களாக உழைத்த மூத்த புள்ளிகளை சற்று யோசிக்க வைக்கும் வகையில், மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது மட்டுமே உச்சவரம்பாகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியின் படி பார்த்தால், கட்சியில் செல்வாக்குடன் வலம் வந்த 13 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில், இந்த 13 பேரும் தற்பொழுது 70 வயதைக் கடந்த மூத்த தலைவர்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி, “யாராக இருந்தாலும் மாவட்ட செயலாளராக அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் அந்தப் பதவியில் தொடர முடியாது” என்ற மற்றொரு விதியும் சேர்த்து அடிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி கட்டுப்பாடுகளின் கீழ் வரும் 70 வயதிற்கு மேற்பட்ட அந்த 13 மாவட்ட செயலாளர்களின் பட்டியல் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலின் விவரம் இதோ,

காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் (வயது 72)

ராணிப்பேட்டை: ஆர். காந்தி (வயது 80)

திருவண்ணாமலை தெற்கு: ஏ.வ. வேலு (வயது 75)

விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் (வயது 71)

சேலம் கிழக்கு: எஸ்.ஆர். சிவலிங்கம் (வயது 75)

ஈரோடு தெற்கு: முத்துசாமி (வயது 77)

தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் (வயது 72)

புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி (வயது 76)

மதுரை மாநகர்: கோ. தளபதி (வயது 70)

தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் (வயது 77)

விருதுநகர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (வயது 77)

தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் (வயது 74)

திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் (வயது 81)

செயற்குழுவில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி