சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்ற போது சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் த்ரிஷாவின் புகைப்படத்தை அங்கு வைக்க வேண்டும் என கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மாநகராட்சி கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததால் தற்போதைய முதல்வர் விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என கூறினர். இதேபோன்று  அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என கூறினார்.

இதனால் பரபரப்பான சூழல் நிலவிய போது சுயேச்சை கவுன்சிலரான மெய்யர் என்பவர் திடீரென திரிஷாவின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என கூச்சலிட்டார். அதாவது கடந்த தேர்தலில் திரிஷாவால் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவரது புகைப்படத்தை அங்கு வைக்காவிடில் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் கூறிய நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் த்ரிஷாவின் புகைப்படத்தை இங்கு மாட்டுவதற்கு இடம் இல்லை எனவும் எனவே வேறு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது