நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை 3.85 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு முட்டை விலை இந்தத் தரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் முட்டை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுதான் இந்த விலை சரிவுக்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஏற்றுமதி முடங்கியதால் தேக்கமடைந்துள்ள முட்டைகளை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் முட்டை விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
முட்டை விலை சரிந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், தீவன விலை உயர்வு மற்றும் ஏற்றுமதி பாதிப்பால் பண்ணையாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறி கவலை தெரிவித்துள்ளனர்.
