தமிழகத்தில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி இறுதி செய்துவிட்டது. அதே நேரத்தில் இன்னும் ஒரு சில கட்சிகள் மட்டும் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில் பாமக தரப்பில் ராமதாஸ் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை. பாமகவில் தற்போது உட்கட்சி மோதல் நிலவிவரும் நிலையில் தந்தை மகன் இரு துருவங்கள் ஆக பிரிந்துள்ளனர்.

இதில் அன்புமணி அதிமுக கூட்டணிக்கு சென்றதால் தற்போது ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜிகே மணி அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய நிலையில் பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் என கட்சியின் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் காரணமாக ராமதாஸ் கூட்டணி முடிவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வர வாய்ப்பில்லை என உறுதியாக கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் தற்போது ராமதாஸ் இந்த கூட்டணிக்கு வர வாய்ப்புள்ள என கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.