பெற்ற தாயையே மகன் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் அரங்கேறியுள்ளது. இந்தத் தம்பதியினரின் மகள் நிஷா என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்; தனது வயதான தாயார் காஸியாபாத்தில் தனியாக இருப்பதால், அவரது உடல்நிலையைக் கண்காணிப்பதற்காகத் தாயின் அறையிலேயே சிசிடிவி (CCTV) கேமராவைப் பொருத்தியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வீடியோ காட்சிகளை நிஷா ஆய்வு செய்தபோது, அவரது சகோதரர் நிஷாந்த் தாக்கூர் என்பவர் தனது தாயின் முடியைப் பிடித்து இழுப்பதும், கட்டிலிலிருந்து கீழே தள்ள முயற்சிப்பதும், அவரது மருந்துகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் தாயை சரமாரியாகக் குத்துவதும் தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிஷா, உடனடியாகக் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு அந்த வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸியாபாத் காவல்துறையினர் இந்த வீடியோ ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட நிஷாந்த் தாக்கூர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ये घटना शर्मसार और हैरान कर देने वाली है…
निशा अमेरिका में और बूढ़ी मां गाजियाबाद, यूपी में रहती है। मां की देखभाल के लिए निशा ने उनके कमरे में CCTV कैमरा लगवा दिया। फुटेज देखी तो पता चला कि मां की पिटाई हो रही है। ऐसा करने वाला उस मां का सगा बेटा निशांत ठाकुर है। वो मां के… pic.twitter.com/uiJQ0yxkat
— Sachin Gupta (@SachinGuptaUP) January 31, 2026
பாதிக்கப்பட்ட முதியவரிடம் வாக்குமூலம் பெறவும், விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து ஒரு மகள் தனது தாயைக் காப்பாற்ற மேற்கொண்ட இந்த முயற்சி பாராட்டுக்குரியதாக இருந்தாலும், கூடவே இருந்து ஒரு மகன் செய்த இந்த அராஜகம் சமூகத்தின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
