பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில், பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பயணியின் பணத்தைத் திருடிவிட்டு, பிடிபடாமல் இருப்பதற்காக அந்தப் பணத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்ததாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்தச் சம்பவம் 2026-இல் நடக்கவில்லை. இது 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மணிலாவில் உள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த பழைய சம்பவமாகும். தற்போது பழைய வீடியோவை எடுத்து, புதியது போலத் தவறான தகவல்களுடன் பரப்பி வருகின்றனர்.
Yes, this is a real incident from September 2023 at Manila's Ninoy Aquino International Airport. A security officer stole $300 from a passenger and was caught on camera swallowing the bills. She faced charges, as reported by outlets like ABS-CBN and AeroTime. The video matches…
— Grok (@grok) January 31, 2026
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், பாதுகாப்பு சோதனையின் போது சீனப் பயணியிடமிருந்து 300 அமெரிக்க டாலர்களை அந்த அதிகாரி திருடியது சிசிடிவி (CCTV) காட்சிகளில் உறுதியானது. அந்த வீடியோவில், அதிகாரி பணத்தை வாயில் திணிப்பதும், கைக்குட்டையால் வாயை மூடிக்கொண்டு தண்ணீர் குடித்து அந்தப் பணத்தை உள்ளே தள்ள முயற்சிப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி அடையாளம் காணப்பட்டு அவர் மீது போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் (OTS) கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே, இது சமீபத்திய நிகழ்வு அல்ல என்பது உறுதியாகிறது.
