மீன ராசி அன்பர்களே,

இன்று புதிய உறவுகள் மேம்படும் நாள். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் கண்டிப்பாக நடக்கக்கூடும். தாராளமாக பண வரவு இருக்கும். இரவு நேர பயணங்கள் தித்திப்பை ஏற்படுத்தும். அந்தஸ்து உயரும் நாள். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். செயல்களில் வெற்றி இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியம் பேச்சுகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

வேண்டா வெறுப்பாக செயல்பட்டவர்கள் இப்போது நட்பு பாராட்டுவார்கள். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள்.  கவனமாக பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மன அழுத்தம் நீங்கும். நிம்மதியுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எந்த பிரச்சனையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வரும். காரியங்கள் முடிவதில் ஏற்பட்ட தாமதப்போக்கு கண்டிப்பாக மாறிவிடும்.

பெண்கள் இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். தைரியமாக காரியங்களை முடித்து வெற்றி பெறுவீர்கள். முகப்பொலிவு அதிகரிக்கும். சிரித்த முகத்துடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் எந்த ஒரு முடிவும் தெளிவாக எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். தடைகளை உடைத்தெறிந்து முன்னேற முடியும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. முயற்சியால் வெற்றி பெற முடியும். இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்