கும்பம் ராசி அன்பர்களே,

இன்று மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கக்கூடும். இனிய செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். அந்தஸ்து உயரும். இன்று மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறி வருவார்கள். நாடாளும் நபர்களை நட்பு கிட்டும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வருமானம் திருப்தியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

எதிர்பார்த்த பண உதவி கண்டிப்பாக கிடைக்கக்கூடும். லாபம் சீராக இருக்கும், பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். வேலைப்பளு குறைந்து விடக்கூடும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். விருந்தினர் வருகையால் செலவு கூடும். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை நடக்கும். இன்று பழக்கவழக்கங்கள் மூலம் முன்னேற்றமான நண்பர்களை கண்டுபிடிப்பீர்கள். புதிய நபர்களால் நல்லது நடக்கும்.

இன்று மன அழுத்தம் விலகி செல்லும். பெண்களுக்கு பணி சுமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். பெற்றோர் சொல்படி கேட்டு செயல்படுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்