மகர ராசி அன்பர்களே,

இன்று செல்வாக்கு மிக்க நாளாக இருக்கக்கூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அந்தஸ்து உயரம் வருங்கால நன்மை கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். ஆதாயம் உங்களை தேடி வரும். எதிரிகள் காணாமல் போவார்கள். பயணங்கள் நல்ல பலனை கொடுக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று பிள்ளைகளின் கல்விக்காக  செலவு இருக்கக்கூடும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

இன்று அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். செலவுகளை திட்டமிடுவது முக்கியம். அடுத்தவர்கள்  விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வீண் விவகாரங்களை விட்டு விலகி இருக்க பாருங்கள். இன்று முன்னேற்றமான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும். சகோதர சகோதரிகள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இன்று மகிழ்ச்சிக்கு எல்லாம் குறைவிருக்காது.

இன்றைய தினம் பெண்களுக்கு சுயதேவை ஓரளவுக்கு பூர்த்தியாகும். நிம்மதியுடன் காணப்படுவீர்கள். பெண்கள் இன்று எந்த செயலிலும் வெற்றியை காண்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவீர்கள்.    உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை  : மேற்கு

அதிஷ்ட எண்  : இரண்டு மற்றும் ஆறு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்