தனுசு ராசி அன்பர்களே,

இன்று உயர்வான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். இறை வழிபாட்டினால் மனதை மகிழ்ச்சி ஆக்கிரமித்திருக்கும். செல்வாக்கு மிக்க நாளாக தான் இன்றைய தினம் இருக்கிறது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வரக்கூடும் .செல்வபோக வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் . வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாழ்க்கை துணை வழியே வரவுகள் வந்து சேரும். கல்யாண கனவுகள் நினைவாகும் .

இன்று தொழில் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றம் கொடுக்கும்.  விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுப செலவுகள் ஒரு பக்கம் இருக்கக்கூடும் கையிருப்பு கொஞ்சம் குறையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க கூடும். நண்பர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படும்.இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்ப்பு ஏற்பட்டு பின்னர் சரியாகும். பணவரவு சீராக அதிகரிக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். இ

ன்று பெண்களுக்கு முயற்சி மூலமாக முன்னேற்றம் இருக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருக்கவும். ஏனோதானோ என்று எதிலும் ஈடுபட வேண்டாம். எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வது நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். இன்று மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது படிப்பிற்கான நாளாக இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்வது நல்லது .இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை  : மேற்கு

அதிர்ஷ்ட எண்   : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்