மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த படத்தில் , உதயநிதியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜூன்29ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தொடர்ந்து, அண்மையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.