மராட்டிய மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அணிஷ் தல்வி என்ற மாணவன் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடன் பயிலும் மாணவி குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அந்த மாணவர் உட்பட மூன்று மாணவர்களை பள்ளியின் இயக்குனர் கண்டித்ததோடு அவர்களை பள்ளியிலிருந்து நீக்கி விடுவதாகவும் எச்சரித்துள்ளார்.
அதே சமயம் அவர் மாணவர் அனிஷ் தல்வியை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் இயக்குனரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
