தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையுடன் விடுமுறையையும் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட விடுமுறையை மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பத்து நாட்களுக்குள்ளேயே பொங்கல் பண்டிகை வரவிருப்பதால், அப்போதும் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தொடர் விடுமுறைகள் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த நீண்ட விடுமுறையைக் கருத்தில்கொண்டு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
