தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக அரசின் முக்கியத் திட்டமான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த நிலையில், 1.15 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு வழங்கும் இறுதிக்கட்டப் பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம், வரும் தேர்தலில் திமுகவுக்கு மகளிர் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று ஆட்சியாளர்களும், அரசியல் நிபுணர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.