அசாம் மாநிலம், ஸ்ரீபூமி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியின் வீட்டின் முழு சிசிடிவி அமைப்பையும் ஹேக் செய்து உளவு பார்த்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவன் தனது காதலி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே சந்தேகத்திற்கிடமாகச் சுற்றி வந்தபோது, அவனைத் தடுத்து நிறுத்தி விசாரித்த அக்கம்பக்கத்தினர், அவனது மொபைல் போனைச் சோதித்தபோது இந்தக் கொடூரச் செயல் அம்பலமானது. அந்தச் சிறுவனின் தொலைபேசியில், பெண்ணின் பிளாட்டுக்குள் நடக்கும் காட்சிகளின் நேரலை ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அவனைப் பிடித்த உள்ளூர்வாசிகள் உடனடியாக அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவன் மைனர் என்பதால், அவன் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
ஒரு பள்ளி மாணவன் எப்படி ஒரு சிக்கலான ஸ்மார்ட் சிஸ்டத்தை ஹேக் செய்ய முடிந்தது என்ற கேள்விக்குச் சைபர் நிபுணர்கள் பதிலளித்துள்ளனர். பயனர்கள் தங்கள் சிசிடிவி கேமராக்களை நிறுவும்போது, நிறுவனங்கள் அமைக்கும் இயல்புநிலை கடவுச்சொற்களான ‘admin’, ‘0000’ அல்லது ‘1234’ போன்ற பலவீனமான கடவுச்சொற்களை மாற்ற மறப்பதே ஹேக்கிங்கிற்குக் காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது போன்ற பலவீனமான கடவுச்சொற்களால், சிறிது தொழில்நுட்ப அறிவு உள்ள எவரும் அந்தக் கேமராவின் கண்காணிப்பை எளிதில் கட்டுப்படுத்த முடியும். இந்தச் சம்பவம், வீடுகளில் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவோர் தங்கள் கடவுச்சொற்களின் வலிமையைப் பற்றி அவசியம் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.
