நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமான நிலையில் UGC நெட் தேர்வு ரத்தை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாணவர்கள் தேர்வு நடைபெறுமா? நடக்காதா? என்று அலைந்து திரிந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தோடு பாஜக விளையாடி வருவதாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கசிவதும், தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டதாகவும் அவர் பாஜக அரசை விமர்சித்துள்ளார். மேலும் ஏற்கெனவே நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த முதுநிலை நீட் தேர்வை மத்திய அரசு திடீரென ஒத்திவைத்தது.