குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பாபென் கிராமத்தில் இன்று (பிப்ரவரி 21, 2026) அரங்கேறிய பயங்கர சாலை விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த வருண் பவார் மற்றும் கமலேஷ் சிக்தானே ஆகிய இரு வாலிபர்கள் பைக்கில் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் வந்த மாட்டு வண்டி மீது பயங்கரமாக மோதினர்.

மோதிய வேகத்தில் இருவரும் பைக்கோடு அப்படியே நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த இருவரையும் மீட்ட மக்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வருண் பவார் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு வாலிபரான கமலேஷின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.