இன்றைய இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்ற ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் விபரீதமாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று நடுரோட்டில் ‘லெஹரியா’ கட் (வளைந்து நெளிந்து ஓட்டுவது) அடித்து ஸ்டண்ட் செய்கிறார்.
Peak satisfaction 😘 pic.twitter.com/BJzfZIFjEl
— desi mojito (@desimojito) February 20, 2026
மிகுந்த தன்னம்பிக்கையுடன் பைக்கை இடது மற்றும் வலது பக்கமாகச் சாய்த்து அவர் சாகசம் செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாகப் பைக்கின் கட்டுப்பாடு இழந்து நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார்.
அவர் தரதரவெனச் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அதே வேளையில், அவருக்குப் பின்னாடியே அதே வேகத்தில் ஸ்டண்ட் செய்தபடி வந்த அவரது நண்பரின் பைக்கும் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
“ரீல்ஸ் எடுக்கப் போய் உயிரையே பணயம் வைப்பதா?” என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய அந்த வாலிபருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
