அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரிய மற்றும் தற்காப்புக் கலைகளைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங் மற்றும் யோகா ஆகிய நான்கு கலைகளையும் ஒரே நேரத்தில் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து செய்து அசத்தினர்.

இதன் மூலம், ஏற்கனவே இருந்த 30 நிமிட சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இந்த வியக்கத்தக்க முயற்சியில் பங்கேற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.