தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் அதிமுக துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, புதிய உறுப்பினர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
