நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிதாஸ் – துர்காதேவி தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனன்யா, ‘தசை நார் வலுவிழப்பு’ எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு சுமார் 9 கோடி ரூபாய் தேவைப்படுவதால், போதிய வசதி இல்லாத பெற்றோர்கள் பொதுமக்களிடம் நிதி உதவி கோரி வருகின்றனர்.

குழந்தையின் நிலையை உணர்ந்து பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக உதவி கேட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னொரு மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தங்களால் முடிந்த சிறு தொகையை நிதியாக வழங்கி, அரிய வகை நோயால் போராடும் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.