தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வி.ஜே கல்யாணி அள்ளித்தந்த வானம், ரமணா மற்றும் ஜெயம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர் மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படி புகழ்பெற்ற நடிகையாக இருந்த இவர் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரோகித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது instaவில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ளார். அதில் முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kalyani Rohit இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kalyanirohit)