கோலிவுட்டில்  முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இவர், பின்பு கடின உழைப்பு காரணமாக பிஸியான நடிகராக வலம்வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இவர் 11ஆம் வகுப்பு படிக்கும்போதே “துள்ளுவதோ இளமை” படம் மூலம் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், தனது பள்ளி தோழர்களை சந்திக்க முடிவு செய்த தனுஷ், அதற்காக சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரீயூனியன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.அங்கு வருகைபுரிந்த பள்ளிப் பருவ நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.