ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு லியோ பட குழுவினர் Glimpse வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்..

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள ‘லியோ’ படத்திற்கான அடுத்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவான இன்று ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் பிறந்த நாளாகும். இவரது பிறந்த நாளை முன்னிட்டு லியோ பட குழுவினர், ஏற்கனவே சஞ்சய் தத் அவர்களுக்கு வெளியிட்டது போல ஒரு glimpse வீடியோவை வெளியிட்டுள்ளனர். படத்தில் ஆண்டனி தாஸாக நடிக்க இருக்கிறார் சஞ்சய் தத்.

அதேபோல ஆக்சன் கிங் அர்ஜுன் ஹரோல்ட் தாஸ் ஆக கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதன்படி, இருவரும் அண்ணன் தம்பியாக இருக்கலாம் என ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது. வீடியோவில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு நபரை கூர்மையான ஆயுதத்தால் கைகளில் தாக்குவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே ஏராளமான நபர்களும் நின்றபடி உள்ளனர்.

இது கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு வடிவமைக்கப்பட்ட காட்சியைப் போல் இருப்பதாகவும், ஆனால் ரோலக்ஸ்க்கே டஃப் கொடுப்பது போல ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.